பிரசார் பாரதி அமைப்பின் வரலாற்று ஆவணங்களை விற்பது தேசத் துரோகம், அந்த முடிவை கைவிடுமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: பிரசார் பாரதி அமைப்பு தன்னிடமுள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப்போவதாக முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப்போகும் ஆவணங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் ஆகும். இது போன்று வரலாற்று ஆவணங்களை விற்பது தேசத் துரோகமாகும். நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.
இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை எதிர்மறையாகப் பாதிக்கக் கூடும். கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.
இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை பணமாக்கப்போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இது சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை. கண்களில் படுவதையெல்லாம் விற்பதற்கு முயற்சிக்கக் கூடாது. பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago