தனியார் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக் கோரி - திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை :

திண்டுக்கல் அருகே நடகோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நடக்கோட்டை கிராமத்தில் கிராமதான நிலம் 280 ஏக்கர், சர்வோதயா நிலம் 86 ஏக்கர் என மொத்தம் 366 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பள்ளிக்கூடம், தொகுப்பு வீடு, மயானம் ஆகியவை கட்டுவதற்கு வழங்குமாறு அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், இந்த இடத்தை போலி பத்திரங்கள் மூலம் தனியார் நிறுவனமான ராபின் பவர் சொல்யூஷன் என்கிற சோலார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து நடகோட்டை கிராம மக்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இவர்களிடம் திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதில், தனியாரிடம் இருந்து நிலத்தை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிக்க உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்