சிவகங்கை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங் கல் படிவம் இல்லாததால், சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர் காப்பீடை பதிய முடியாமல் விவசா யிகள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர் காப் பீட்டுக்கான அடங்கல் சான்று வழங்கியதில் முறைகேடு நடந்தது. இதையடுத்து வேளாண்மைத் துறையே 3 வண்ணங்களில் அடங்கல் படிவங்களை அச்சிட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி வருகிறது.
அந்தப் படிவங்கள் மூலமே விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்க வேண்டும். இதில் ஒரு பிரதி விவசாயிக்கும், மற்றொரு பிரதி வேளாண்மைத் துறைக்கும் வழங்கப்படும். மூன்றாவது பிரதியை கிராம நிர்வாக அலுவலர் வைத்துக் கொள்வார். தற்போது நெல் பயிர் காப்பீடு பதியும் பணி நடக்கிறது.
ஆனால் கிராம நிர்வாக அலுவ லர்கள் பலருக்கு படிவங்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அடங்கல் சான்று வழங் குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் பயிர் காப்பீடை பதிவுசெய்ய முடி யாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பூர்வீக வைகை பாசன சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம், நிர்வாகி ஆப்ரகாம், தாயமங்கலம் ஊராட்சித் தலை வர் மலைராஜ் ஆகியோர் கூறிய தாவது:
நவ.15-ம் தேதிக்குள் காப்பீ டுக் காகப் பதிய வேண்டும். ஆனால், இதுவரை பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் சான்று வழங்கவில்லை. மேலும் பங்கு பிரிக்காத சொத்துகளில் நிலத்தை உழுபவருக்கே அடங்கல் சான்று வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் அருள் கூறுகையில், ‘விஏஓக்கள் பலருக்கு படிவமே வந்து சேரவில்லை. இதனால் அடங்கல் சான்று கொடுக்க முடியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago