வெம்பக்கோட்டை அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு :

By செய்திப்பிரிவு

சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் ராமுத்தேவன்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி கிராமம் வடக்கு காலனியில் உள்ள பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. அதோடு, அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் 75 சதவீதத்துக்கு மேல் பழுதடைந்துள்ளன. புதர்கள் காரணமாக இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்