காரைக்குடி அருகே கண்மாயில் ரூ.1.50 கோடியில் - பறவைகளுக்காக உருவாகும் அழகிய தீவு :

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரூ.1.50 கோடியில் கண் மாயில் பறவைகளுக்கான தீவு அமைகிறது.

காரைக்குடி அருகே சின்ன வடகுடிப்பட்டி கிராமத்தில் 48.43 ஏக்கரில் பெரிய கண்மாய் உள் ளது. மொத்தம் 2.31 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இக்கண்மாய் மூலம் 500 ஏக்க ருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், இக் கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் தண்ணீர் தேங்கு வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் விவசாயம் பாதிக்கப் பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது.

இதையடுத்து இக்கண்மாயை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி அனுமதியோடு, ஏஎம்எம் அறக்கட்டளை தூர்வாரி வருகிறது.

இப்பணியை சிறுதுளி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் கண்மாயில் பறவைகளுக்காக மூன்று தீவுகளை உருவாக்கி வரு கின்றனர்.

இதுகுறித்து சிறுதுளி நிறு வனத்தினர் கூறியதாவது: ஏற் கெனவே எங்கள் நிறுவனம் கோவை உக்கடம் பகுதியில் அழகிய தீவுகளுடன் கூடிய கண்மாய்களை உருவாக்கி உள் ளது. அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், சின்ன வடகுடிப்பட்டி கண்மாயிலும் உருவாக்க உள்ளோம். முதலில் கண்மாயை பிறை வடிவில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரு கிறோம். அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரையை பலப்படுத்துகிறோம். மீதி மண் ணை வெளியே கொண்டு செல்ல மாட்டோம். அதைக் கொண்டு கண்மாய்க்குள்ளேயே தீவுகளை உருவாக்குகிறோம். ஒவ்வொரு தீவும் 50 மீட்டர் விட்டம், 15 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும்.

ஏற்கெனவே இக்கண்மாய்க்கு அதிகளவில் வெளிநாட்டு பற வைகள் வருகின்றன. இதனால் தீவு பகுதியில் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக மரக்கன்றுகள், அழகிய புற்களையும் நட உள்ளோம். இதன் மூலம் நீர்நிலைகள் தூர் வாரப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். ரூ.1.50 கோடி செலவில் இப்பணி மேற் கொள்ளப்படுகிறது.

இதேபோல் அருகேயுள்ள செட் டியான் கண்மாயையும் தூர்வாரி தீவுகளை அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்