தேர்தல் செலவின நிதி வழங்காததால் - வாக்காளர் திருத்த முகாம் புறக்கணிப்பு : வருவாய் துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான மதிப்பூதியம், செலவினம் வழங்காததைக் கண்டித்து நவம்பரில் நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக வரு வாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.பி.முருகையன் கூறியது:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 6 மாதங்களாகிவிட்டது. இத்தேர்தல் பணியில் ஈடுபட்ட வருவாய் அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. துணை ஆட்சியர் முதல் கிராம உதவியாளர் வரையில் பலர் தேர்தல் பணியின்போது கரோனா பாதித்து இறந்துள்ளனர். இவர் களுக்கும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

இதற்கு முந்தைய தேர்தல் களின்போது தேர்தல் பணியை அங்கீகரித்து உடனடியாக மதிப் பூதியம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உயர் அலுவ லர்களின் அலட்சியம் காரண மாக மதிப்பூதியம் 6 மாதம் தாமத மாகியுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்திய வாகனங்களுக்கு வாடகை, எரிபொருள் செலவு, வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள் என எந்த செலவுக்கும் பணம் வழங்கப்படவில்லை.

இதற்குரிய தொகையை கேட்டு வருவோருக்கு பதில் தர முடி யாமல் வருவாய்த்துறை அலு வலர்கள் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் செலவின நிதி ஒதுக்கீட்டை உடனே அனுமதிக்க வேண்டும். 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்களை உடன் ஏற்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியு றுத்தி தலைமை தேர்தல் அலு வலர் சத்யபிரதாசாகுவிடம் முறை யிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சிறப்பு முகாம் பணி களை வருவாய்த்துறையினர் புறக்கணிப்பர். அனைத்து நிலையிலுள்ள அலுவலர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்பதால் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதைத் தவிர்க்க வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 3 கோரிக்கைகளை நிறை வேற்ற தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்.17-ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்