நிலக்கோட்டை அருகே மல்லனாம்பட்டியில் கல்குவாரி குத்தகை ஏலம் தொடர்பாக, ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி ஏ.மேரி என்ப வர் உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவில், குவாரி பகுதியில் 300 மீட்டருக்குள் குடியிருப்புகள் உள்ளன. குவாரியால் குடியிருப் புகளும், விளைநிலங்களும் பாதிக்கப்படும். எனவே குவாரி டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷா பானு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், அரசு புறம் போக்கு நிலத்தில் உள்ள கல் குவாரி 40 ஆண்டுகளாக உள்ளது. நிலக்கோட்டை மக் களின் கட்டுமானத் தேவை, அரசு திட்டங்களின் தேவையை இந்த குவாரி பூர்த்தி செய்கிறது.
குவாரியை சுற்றியுள்ள நிலம் விளைச்சலுக்கு தகுதியற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குவாரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் நிரந்தர கட்டுமானம் இல்லை. 300 மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகளும், அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்களும் இல்லை என ஆட்சியர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
ஆற்று மணலுக்குத் தடை உள்ள சூழலில் கட்டுமானத் தொழிலுக்கு மாற்று ஏற்பாடு உடைகற்கள்தான். குவாரி டெண்டர் அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago