வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு - 2 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 4 பேர் கைது : ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 32 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

தூத்துக்குடி சோரீஸ்புரம், நியூ சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்த சோ.சுப்பிரமணியன் (51) என்பவரது வீட்டில் கடந்த 27.1.2021 அன்றும், முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த செ.அம்சவள்ளி (36) என்பவரது வீட்டில் 11.2.2021 அன்றும், தூத்துக்குடி கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்த சுதானந்தம் (61) என்பவரது வீட்டில் கடந்த 8.8.2021 அன்றும் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன.

சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க சிப்காட் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிந்தனர்.

இந்திராநகரைச் சேர்ந்த சுப்புக்கனி மகன் மாரிச்செல்வம் (19), கோரம்பள்ளம் அய்யன டைப்பு பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் முனீஸ்துரை (21) மற்றும் 2 இளஞ்சிறார்களை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்