வேலூர், ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகங்களில் - மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் : 36 பேருக்கு கரோனா தடுப்பூசி : மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொண்ட நிலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கரோனா ஊரடங்கு விதிகள் தளர்வுடன் நடைபெறும் கூட்டம் என்பதால் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க வந்தவர்களை நுழைவு வாயில் அருகே காவல் துறையினர் முறையாக சோதித்த பிறகே உள்ளே அனுப்பினர். கரோனா தடுப்பூசி செலுத்தாமல் வந்த, 16 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகே மனுக்கள் அளிக்க வரிசையில் அனுமதிக் கப்பட்டனர்.

குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். வேலூர் மாநகர பகுதியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தினர் அளித்த மனுவில், ‘‘எங்களுக்கு ஒரே இடத்தில் பட்டாவுடன் கூடிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.

குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகளை ஆட்சியர் வழங்கினார்.

அதேபோல், காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுகந்திக்கு சேனூர் பகுதியில் வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட் டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலியும், ஒருவருக்கு ரூ.6,500 மதிப்புள்ள சக்கர நாற்காலியும், இரண்டு பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான ஊன்றுகோலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தி 659 பேர் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல், தலா ஒரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி மற்றும் மடக்கு ஊன்று கோல் என ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 4 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், சமூக பாது காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், கோட்டாட்சியர்கள் வெற்றிவேல் (திருவண்ணாமலை), கவிதா (ஆரணி), விமல்ராஜ்(செய்யாறு) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்