பெருங்காலாம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் - மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

பெருங்காலாம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் முடிவை ஒருதலைப்பட்சமாக அறிவித்ததாக தேர்தல் அலுவலர்மீது ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம் பெருங்காலாம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாவீரன் மனைவி மகாலட்சுமி தன் ஆதரவாளருடன் ஆட்சியர் மோகனிடம் நேற்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளியான நான் பெருங்காலாம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.

கடந்த 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நானும், மற்றொரு வேட்பாளர் சூரியகாந்தியும் 245 வாக்குகள் சரிசமமாக பெற்றோம். எங்கள் கோரிக்கையான மறுவாக்கு எண்ணிக்கை அல்லது குலுக்கல் சீட்டு முறையை பின்பற்ற மறுத்த தேர்தல் அலுவலர் சூரியகாந்தி பெருங்காலாம்பூண்டி ஊராட்சிமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித் தார்.

எனவே பெருங்காலாம்பூண்டி ஊராட்சிமன்றத் தேர்தல் முடிவைநிறுத்திவைத்து, மறுவாக்கு எண் ணிக்கைக்கு உத்தரவிடவேண்டும். தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்