விழுப்புரத்தில் காவல்துறையி னருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று காவல்துறையினருக்கு மருத்துவர் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விபத்தில் சிக்கிக்கொள்வோருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியை எஸ்பி நாதா தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அடிப்படை உயிர்காக்கும் திறமைகள் குறித்த முதலுதவி பயிற்சியான இருதயம், நுரையீரல் உள்ளிழத்தல் எனப்படும் சிபிஆர் ( Cardiopulmonary resuscitation) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago