சிவகங்கை நகராட்சிப் பகுதியில் விதிகளை மீறி, காஞ்சிரங்கால் ஊராட்சி நிதியை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையக் கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலக அதிகாரிகளின் நெருக்க டியால் காஞ்சிரங்கால் ஊராட்சி நிதியை விதிமுறைகளை மீறி நகராட்சிப் பகுதியில் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி உறுப்பினர்களிடமும் ஒப்புதல் பெறப்படுவதில்லை.
காஞ்சிரங்கால் ஊராட்சியில் பூங்கா இல்லாத நிலையில், அந்த ஊராட்சிக்குரிய நிதியில் சிவகங்கை நகராட்சிப் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டது. இது மிகுந்த சர்ச்சையானது. இப்பிரச்சினை ஓய்வதற்குள் தற்போது ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமலேயே ரூர்பன் திட்டத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சத்தில் சிவகங்கை நகராட் சியில் டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையக் கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சிவகங்கை நகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி மையக் கட்டிடத்தின் அருகே மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீர். தற்போது போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் பகுதி வழியாகத் தான் வெள்ளநீர் செட்டியூரணி, தெப்பக்குளத்துக்குச் செல்லும். அதிக தண்ணீர் தேங்கும் இடத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது.
அதோடு, கட்டுமானப் பணிக் கான கிராவல் மண்ணை அப் பகுதியிலிருந்தே தோண்டி எடுத் துள்ளனர். இதனால் அங்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கட்டிடத்தின் நிலைத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போதே கிராவல் மண்ணுக்கு தனியாக பணம் ஒதுக்கப்படும். ஆனால், இக்கட்டிடத்துக்கு அருகில் உள்ள மண்ணை எடுத்து பயன்படுத்தி யிருப்பதால் முறைகேடு நடந் திருக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரூர்பன் திட்டத் துக்கான நிதி ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலு வலகம் மூலம்தான் ஒதுக்கப் படுகிறது. அதனால் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago