மானாமதுரை அருகே தனியார் மருத்துவமனை நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மானாமதுரை அருகே கல்குறிச்சியில் தனியார் மருத் துவமனை செயல்படுகிறது. அப்பகுதியில் தங்களது நிலங்களை அளவீடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலத்தை கிராம பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி நிலத்தை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து தர வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அளவீடு செய்ய வருவாய்த் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய்த் துறையினர், நில அளவைத் துறையினர் போலீஸ் பாதுகாப்பு டன் மருத்துவமனை நிலத்தை அளவீடு செய்ய நேற்று வந் தனர். அங்கு வந்த கிராம மக்கள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் திடீரென உட லில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago