உலகில் பார்வையற்ற 4.5 கோடி பேரில் நான்கில் ஒருவர் என 1.12 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர் என மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பேசினார்.
உலக பார்வை தினம் அக்டோபர் 2-வது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, கண் மருத்துவர்கள் சங்கம் நடத்தியது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து அரவிந்த் கண் மருத்துவமனை வரை விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடந்தது. மருத்துவர்கள், பணியாளர்கள் பங்கேற்ற இப்பேரணியை மதுரை காவல் துணை கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தொடங்கிவைத்தார். தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கிம், மருத்துவர் ஆர்.கிருஷ் ணதாஸ், மக்கள் தொடர்பு அலு வலர் ராமநாதன் பங்கேற்றனர்.
மருத்துவமனையில் செவிலி யர்கள் ஏற்பாடு செய்திருந்த கண் விழிப்புணர்வு கண்காட்சியை மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தொடங்கி வைத்து பேசியது: உலகில் உள்ள 45 மில்லியன் பார்வையற்றவர்களில், நான்கில் ஒருவர் இந்தியாவில் உள்ளனர். இது 1.12 கோடிக்கும் அதிகம். பார்வையற்றவர்களில் 80 சதவீதம் பேருக்கு அதை தடுக்கும் வாய்ப்பு உரிய நேரத்தில் எளிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago