சிவகங்கை மாவட்டத்தில் நலி வடைந்த கூட்டுறவு சங்கங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 650-க்கும் மேற்பட்டவை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை விற்பனை செய் வதற்கான கமிஷனை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது.
இது தவிர சாக்குகளை விற்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை சங்கங்களுக்கு கிடைக்கி றது. இந்த தொகை மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 125 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பெரும்பாலானவை நலிவடைந்த நிலையில் உள்ளன. இதனால் அரசு வழங்கும் மானியம், சாக்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைகளை சங்கங்களில் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
சிங்கம்புணரியைச் சேர்ந்த ஒரு ரேஷன் கடை ஊழியருக்கு 23 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதேபோல் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பலருக்கு 6 மாதங் களாக ஊதியம் வழங்கவில்லை. கூட்டுறவு சங்கத்தில் உள் ளவர்கள் அரசு எங்களுக்கு கொடுக்கும் தொகையையும் எடுத்து கொள்கின்றனர். இது குறித்து கேட்டால் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு வற்பு றுத்துகின்றனர். இதனால் மன உளைச்சலில் உள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago