சேலம் ராணுவ கேன்டீனில் தென்னிந்திய ராணுவ தளபதி ஆய்வு :

சேலத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரர்கள் ராணுவ கேன்டீனில் தென்னிந்தியாவின் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் பங்களிப்பு மருத்துவமனை மற்றும் ராணுவ கேன்டீன் அரியானூரில் இயங்கி வருகிறது. தென்னிந்தியாவின் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா அரியானூரில் உள்ள ராணுவ கேன்டீனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொருட்கள் அறையை பார்வையிட்டு, இருப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பதிவேடுகளை ஆய்வு செய்து, பொருட்கள் விநியோகம், கொள்முதல் கணக்குகளை பார்வையிட்டார்.ராணுவ கேண்டீனுக்கு வந்த முன்னாள், இந்நாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய மேஜர் ஜெனரல், குறைகளைக் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து சேலத்தில் உள்ள முன்னாள் படை வீரர் பங்களிப்பு மருத்துவமனையிலும் மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கோவை ஸ்டேஷன் ஹெட் குவார்ட்டர்ஸ் சேர்ந்த கர்னல் ஆனந்தன், முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஆரோக்கியத் திட்டத்தின் அலுவலர் கர்னல் குணசேகரன் மற்றும் வேலூர் மாவட்ட ராணுவ தலைமை கேன்டீன் செயல் இயக்குநர் கர்னல் டி.கங்காதரன், சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் மேஜர் பிரபாகர் மற்றும் கேண்டீன் உதவி இயக்குநர் ஹானரரி கேப்டன் எஸ்.கிருஷ்ணன் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்