நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள 18 கொலை வழக்குகளில் - குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் : மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள 18 கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய மண்டலத்திலுள்ள திருச்சியில் 4, புதுக்கோட்டையில் 1, பெரம்பலூரில் 2, அரியலூரில் 2, தஞ்சாவூரில் 5, மயிலாடுதுறையில் 1 என 15 கொலை வழக்குகளிலும், புதுக்கோட்டையில் 1, திருவாரூரில் 1, மயிலாடுதுறையில் 1 என 3 ஆதாயக் கொலை வழக்குகளிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாமல் உள்ளனர்.

நிலுவையில் உள்ள இவ்வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் முன்வரலாம். இவ்வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகளை கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு சன்மானமாக ஒவ்வொரு வழக்குக்கும் ரூ.10,000 வெகுமதி அளிக்கப்படும்.

இவ்வழக்குகளில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள பொதுமக்கள் மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகத்தை 0431-2333866, திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தை 0431-2333909, தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தை 04362-277477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர மாவட்ட எஸ்.பி அலுவலகங்களை திருச்சி - 9498100645, புதுக்கோட்டை - 9498100730, பெரம்பலூர் - 9498100690, அரியலூர் - 9498100705, தஞ்சாவூர்- 9498100805, திருவாரூர் - 9498100905, மயிலாடுதுறை - 9442626792 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்