தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிக்குச் செல்லும் தமிழக வீராங்கனைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வாழ்த்தி வழியனுப்பினார்.
ஹாக்கி இந்தியா அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான போட்டிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அக்.21 முதல் நவ.1 வரை நடைபெற உள்ளன. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளின் வீராங்கனைகள் 36 பேருக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்க ஹாக்கி மைதானத்தில் கடந்த 10 நாட்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கான முகாம் நிறைவடைந்த நிலையில், இந்த அணிகளில் உள்ள 36 வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் உபகரணங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வழங்கினார். மேலும் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி போட்டியில் பங்கேற்க வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago