சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று (14- ம் தேதி) முதல் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுடுத்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் கடந்தாண்டு நிறுத்தப்பட்டது. பின்னர் கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, இந்த ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், சில ஊர்களில் ரயில் நின்று செல்லவில்லை. ரயில் பல ஊர்களில் நிற்காததால் பொதுமக்களும், விவசாயிகளும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே, அனைத்து ஊர்களிலும் ரயில் நின்று செல்ல வேண்டும் என பயணிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து, இன்று (14-ம் தேதி) முதல் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் கூத்தகுடி, சிறுவத்தூர், புக்கிரவாரி, மேல்நாரியப்பனூர், தலைவாசல்,வாழப்பாடி, ஏத்தாப்பூர்,அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட ஊர்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago