திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெற சிறு பான்மையின மாணவர்கள் விண் ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவித் தொகையும், மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப் படையில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி படிப்பு கல்வி உதவி தொகைக்கு நவம்பர் 15-ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி – வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்க நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள், தங் களது கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பிறகுதான் விண்ணப்பத்தை இணையதளத்தில் சரிபார்க்க முடியும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள், இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலை யங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்கள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago