ஐந்தாவது கட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் - கோவையில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

ஐந்தாவது கட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில், கோவை மாவட்டத்தில் நேற்று 1.60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஐந்தாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, ஊரக பகுதிகள் என மொத்தம் 1,429 மையங்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேவை அடிப்படையில் பேருந்து நிலையங்களில் நடமாடும் முகாம்கள் நடைபெற்றன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் நேற்று நடைபெற்ற முகாமில் மொத்தம் 1.60லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கு முன்பு நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 4,41,480 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 742 முகாம்கள் மூலம் 1,39,640 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 78,396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மருத்துவத் துறை மற்றும் தன்னார்வலர்கள் என 2,968 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். வீரபாண்டி, கணபதிபாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், நேரில் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தென்னம்பாளையம், பாண்டியன் நகர், புதிய பேருந்து நிலையம், பத்மாவதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். காங்கயம் ஒன்றியத்தில் நேற்று 4100 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்