கொலை, குற்ற வழக்குகளில் சட்ட மன்ற, மக்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால், எந்த கட்சியாக இருந்தாலும் உடனடி யாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரபிரதேச சம்பவத்தைக் கண்டித்தும் கடலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் மாதவன், வாலண்டினா, விவசாய சங்கமாநில செயலாளர் சாமி நடரா ஜன், மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறுகையில், "தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் தான் ஆகிறது.
இருந்தாலும் இன்னும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். மக்கள் பிரச்சினைக ளுக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
இதையடுத்து கடலூர் திமுக எம்பி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கொலை, குற்ற வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago