அண்ணாமலை பல்கலை.யில் - நுண்ணுயிர் உயிரி தொழில்நுட்ப பயிலரங்கம் :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயி ரியல் துறையில் நுண்ணுயிர் உயிரி தொழில்நுட்ப உயிர் உர மற்றும் மட்கும் உர உற்பத்தி தொழில்நுட்பம் எனும் தலைப்பில் இரண்டுநாள் தேசிய பயிலரங்கம் நடந்தது.

வேளாண் புல முதல்வர் கணபதிதலைமை தாங்கி பயிலரங்கை தொடக்கி வைத்து பேசினார்.வேளாண் நுண்ணுயிரியல் துறைதலைவர் முனைவர் முரளிகிருஷ் ணன் வரவேற்று பேசினார். இதில் வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் முரளிகிருஷ்ணன், இளங்கோ, மகாலட்சுமி, பாரதிராஜா, குமரேசன், சிவசக்திவேலன் ஆகியோர் எழுதிய புத்தகத்தின் முதல் படியை வேளாண் புல முதல் வர் கணபதி வெளியிட்டார். இதனை பேராசிரியர் முரளிகிருஷ் ணன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப நிகழ்வில் ஈச்சங்கோட்டை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் நுண்ணுயிரியல் துறை இணைப்பேராசிரியர் செந்தில்குமார் பயிர் வளர்ச்சியில் மெத்திலோ பாக்டீரியவின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். நுண்ணுயிரிகளின் மூலம் பயிர்களுக்கு தேவையான சாம்பல் சத்து எனும் தலைப்பில் திண்டிவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் பிருந்தாவதி பேசினார். பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி (நுண்ணுயிரியல்) முனைவர் செல்வகுமார் நகரமைப்பு திடக்கழிவு மேலாண்மை எனும் தலைப்பில் பேசினார். முனைவர் பாலமுருகன் சுருள்பாசி சந்தை மயமாக்கல் மற்றும் அதன் சவால்கள் எனும் தலைப்பில் பேசினார். இதனைத் தொடர்ந்து உயிர் உர உற்பத்தி மையத்தின் செயல்பாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை உத்திகள் ஆகியவற்றை பற்றி அறிந்துகொள்ள களப்பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்