மானாமதுரையில் பாஜக சார்பில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹெச்.ராஜா பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வந்தவர்களை போலீஸார் அடித்து விரட்டியுள்ளனர். இந்து விரோத செயல்களை வேரோடு வெட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது.
அறங்காவலர் குழு இல்லாத கோயில்களில் காவலாளியைகூட நியமிக்க முதல்வருக்கோ, அறநிலையத் துறை அமைச்சருக்கோ அதிகாரம் இல்லை. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இடிந்த நிலையில் உள்ளன. அவற்றை அறநிலையத் துறை எடுத்து சீரமைக்கவில்லை. குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி. கோயில்கள், அறக்கட்டளைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. பாஜகவை சீண்டினால் அவற்றில் மத்திய அரசை தலையிடும் என்று கூறினார்.
பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago