சாத்தூர் ரயில்வே பீடர் சாலை மேம்பாலத்தை : மாற்று வழித்தடத்தில் அமைக்க கோரி வழக்கு :

By செய்திப்பிரிவு

சாத்தூர் - இருக்கன்குடி ரயில்வே பீடர் ரோடு மேம்பாலத்தை மாற்று வழித்தடத்தில் அமைக்கக் கோரிய வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தூரைச் டேனியல்ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சாத்தூர் -இருக்கன்குடி ரயில்வே பீடர் சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். .இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்தை மாற்றுத்தடத்தில் நிறைவேற்றக் கோரினோம்.

இந்த இடத்துக்குப் பதிலாக 3 மாற்று வழித்தடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வழித்தடங்களில் மேம்பாலம் கட்டினால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, ரயில்வே பீடர் சாலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்காமல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை மாற்று வழிகளில் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனு தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்