அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட மனநலத் திட்டம் சார்பில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மனநல நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வெங்கடரங்கன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரகாஷ், கார்த்திக்குமார், இந்திய மருத்துவக் கழக குற்றாலம் கிளைத் தலைவர் அசரானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு மருத்துவமனையில் உள்ள மனநல வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், குழந்தைகள் மனநலம், மது போதை சிறப்பு சேவைகள் பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் சிறப்புரையாற்றினார்.
ஏற்றதாழ்வு நிறைந்த உலகில் மனநலம் என்ற தலைப்பில் மனநல மருத்துவர் நிர்மல் சிறப்புரையாற்றினார்.
நர்ஸிங் மாணவிகள், பயிற்சி மருந்தாளுநர்களுக்கு மனநல விழிப்புணர்வை விளக்கும் வகையில் ரங்கோலி போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டிகளுக்கு, உறைவிட மருத்துவர் அகத்தியன், மூத்த குடிமை மருத்துவர்கள் கீதா, அனிதா, லதா ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசளித்தனர்.
தென்காசி வ.உ.சி வட்டார நூலகம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக மனநல தினவிழா வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நூலகத்தில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன், தென்காசி கேன்சர் சென்டர் பாரதிராஜா முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினர். நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.
திருநெல்வேலி
மன நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி முருகன்குறிச்சி பிஷப் சார்ஜென்ட் அன்பில் இல்லம் அருகில் இருந்து தொடங்கியது. பேரணியில் நெல்லை திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், திருமண்டல மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயம் ஜூலியட், மத்திய மண்டல தலைவர் ஜெபராஜ், கதீட்ரல் பேராலய குருவானவர் பர்னபாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago