போக்ஸோ வழக்கில் தொடர் புடைய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே தாதம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (31), 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (48), 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி மனோகர் பரிந்துரை செய்தார். அதையேற்று ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து பெருமாள், லட்சுமணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago