மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத் திக்கொண்ட ஒருவர் கூட கடந்த 2 மாதங்களில் கரோனாவால் இறக்கவில்லை என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாளை (அக்.10) 5-வது மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் நடக்கிறது. இதில் 1.50 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் டோஸ் போட்டுள்ள 1.34 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்த வேண்டியுள்ளது. இது குறித்த குறுந்தகவல் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகரில் 500, புறநகரில் 900 என 1,400 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கும். வீடற்றவர், சாலையோரம் தங்கியுள் ளோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட்டில் 263 பேர், செப்டம்பரில் 235 பேர் கரோனா பாதிப்பால் சேர்க் கப்பட்டுள்ளனர். இதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 4 பேர் மட்டுமே ஐசியு வார்டில் சேர்க்கப்பட்டனர்.
2 டோஸ் போட்ட 30 பேர் சிகிச்சைக்கு சேர்ந்திருந்தாலும், யாரும் ஐசியுவில் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு நோய் பாதிப்பு கடுமையாக இல்லை. ஒரு டோஸ் தடுப்பூசி யாவது செலுத்திக் கொண்டவர்களில் ஒருவர் கூட கரோனாவுக்கு இறக்கவில்லை.
இந்தக் கருத்தை மையப்படுத்தி விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும், பரிசுகளும் வழங்கப் படும். கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தபோது மக்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்தினர்.
தற்போது பழைய ஆர்வம் இல்லை. இந்தப் போக்கு மாற வேண்டும். இன்னும் மதுரை மாவட்டத்தில் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை.
5-வது சிறப்பு முகாமுக்காக 1.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 10 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. மதுரையில் 7 வார்டுகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை 20 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago