ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் (பொறுப்பு) ஆ.ம.காமாட்சி கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (அக்.10) மாவட்டத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 617 இடங்களில் இம்முகாம் நடைபெறும். இம்முகாமுக்காக 72,900 கோவிஷீல்டு மற்றும் 7,100 கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 8,27,398 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி 60 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் 1,11,815 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 200 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago