சென்னையை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி - தாம்பரம் - காவல் ஆணையரக எல்லை வரையறுக்கும் பணி நிறைவு : சிறப்பு அதிகாரிகள் காவல் ஆணையராக விரைவில் பொறுப்பேற்பு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னையைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம்காவல் ஆணையரக எல்லைகள்வரையறுக்கும் பணி நிறைவடைந் துள்ளது. இதையடுத்து சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட கூடுதல் டிஜிபிக்கள் எம்.ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் காவல் ஆணையராக விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து தாம்பரம்,ஆவடி என புதிதாக இரு காவல்ஆணையரகங்கள் அமைக்கப் படும் என சட்டப் பேரவையில் கடந்த செப். 13-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய காவல் மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைப் பகுதிகளை பிரிப்பது, காவல் நிலையங்களை பிரிப்பது, புதிதாக நிர்வாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற தொடங்கின.

புதிய காவல் ஆணையரகங் களை விரைந்து கட்டமைக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக தமிழக காவல் துறையின் நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி எம்.ரவிநியமிக்கப்பட்டார். ஆவடி காவல்ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். இவர்கள் புதிய காவல் ஆணையரகத்தை கட்டமைக்கும் பணியை தொடங்கினர்.

முதல் கட்டமாக புதிதாக அமையஉள்ள ஆவடி காவல் ஆணையரகத்துக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்காக அம்பத்தூர், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 3 காவல் துணைஆணையர்கள்நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மாதவரம், புழல், எண்ணூர், பூந்தமல்லி, எஸ்ஆர்எம்சி ஆகிய 8 காவல் சரகங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குள் வர உள்ளன.

இதேபோல், தாம்பரம் காவல் ஆணையர் எல்லைக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, வண்டலூர் ஆகிய3 காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 3 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சங்கர் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கங்கரணை, ஓட்டேரி, மணிமங்கலம், துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, தாழம்பூர், கேளம்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த எல்லைக்குள் வர உள்ளன.

இதற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி சங்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது.

விமான நிலையம், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ராயலா நகர், மதுரவாயல், கொடுங்கையூர், திருவொற்றியூர், தி.நகர், கோயம்பேடு,கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நீலாங்கரை, கானாத்தூர் உட்பட பல்வேறு பகுதிகள் சென்னை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்கிறது. சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட கூடுதல் டிஜிபிக்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் விரைவில் காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை காவல் ஆணையரகம் 3 ஆக பிரிக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்த, டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று (அக்.7-ம் தேதி), சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரி ஏடிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்