விழுப்புரம் அருகே வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சிந்தாமணி, தொரவி வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியது:
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் வெப் கேமராஆகியவை பொருத்தப் பட்டன. நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கூடுதலாக வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago