மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் அக்.13-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத்து றை மூலம் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட் டை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து பய னடையலாம். அதனடிப்படையில் அதிக நபர்கள் விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய் யப்பட்டு வருகின்றன.
மேலும் 8,436 நபர்கள் இதுவ ரை விண்ணப்பம் செய்யப் படவில்லை. இந்த தனித்துவ அடையாள அட்டையை ஆதா ரமாக கொண்டு எதிர்வரும் காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதால் இதுவரை தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் அக்.13-ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago