சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் செவ்வாய் சாட்டுதல் விழாவையொட்டி, கொட்டும் மழையில் கிராமமக்கள் ஊர் வலமாகச் சென்றனர்.
கிருஷ்ணராஜபுரம் பகுதி மக் களின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில், மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ளது. இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் சாட்டுதல் விழா நடந்து வருகிறது.
கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு விழா நடக்கவில்லை.
இந்தாண்டு செவ்வாய் சாட்டுதல் விழாவையொட்டி கிருஷ்ணராஜபுரம் மக்கள் ஒரு வாரத்துக்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.
நேற்று முன்தினம் வீடுகளில் பணியாரம், கொழுக்கட்டை மற்றும் நாட்டுக் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை தயாரித்தனர்.
இரவில் புது மண் கலயங் களில் உணவை எடுத்துக் கொண்டு மானாமதுரை தெருக்களில் ஊர்வ லமாகச் சென்றனர். அப்போது பலத்த மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் தீப்பந்தங்களை ஏந்தி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு உணவு படைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வீட்டுக்குச் சென்று விரதம் முடித்தனர். இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago