சேலம் மாவட்டத்தில் சாரல் மழை :

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவிவருகிறது.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்தகாற்றும், லேசான மழை தூரலுமாக இருந்து வருகிறது. ஏற்காட்டில் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில்,பகலில் பனிபடர்ந்த சாலையில் வாகனங்களில் செல்லுபவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி பயணம் செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வீரகனூர்11, கெங்கவல்லி 10, ஏற்காடு 10, காடையாம்பட்டி8.4, மேட்டூர் 8.4, ஆணைமடுவு8 ஆத்தூர் 5.2, கரியகோவில் 8, தம்மம்பட்டி 6, சேலம் 4.5, ஓமலூர் 3.8, எடப்பாடி 3 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்