சேலம் தாதம்பட்டி ஏரியில் - செத்து மிதக்கும் மீன்களை அகற்ற மக்கள் கோரிக்கை :

சேலம் தாதம்பட்டி ஏரியில் செத்துமிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரப் பகுதியில் உள்ள தாதம்பட்டி ஏரியில் நீர் வரும் பாதை அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு நீர்வரத்து சரிந்தது. ஏரியை சுற்றியுள்ள காந்திநகர், என்ஜிஓ காலனி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்டபகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது. தற்போது, தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில்சிலர் மீன் பிடிக்க டெண்டர் எடுத்ததாக கூறி ஏரியில் மீன் பிடித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏரியில்மீன்கள் செத்து கரையோரம் ஒதுங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருவதோடு, துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால், ஏரி நீர் மாசு ஏற்படும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, ஏரியில் செத்துமிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்