கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

புரட்டாசி சனிக்கிழமைகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்த இயக்கம் சார்பில் சேலம் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:

கரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது புரட்டாசி மாதம்பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், பக்தர்களை கோயில்களில் சுவாமிதரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்