மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுப்பு :

By செய்திப்பிரிவு

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் அருகே சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு மாதம்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையிலும், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அக்.7 வரை பக்தர்கள் செல்ல தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

கோயில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம்போல் நடைபெறும். மேலும் இம்மாதம் 15-ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள நவராத்திரி விழாவுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், திருச்சுழி பூமிநாதன் கோயில் மற்றும் குண்டாற்றங்கரைக்கும் செல்ல வேண்டாம் என ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்