கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை பின்புறம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 21 பிளாக்குகளில் 960 வீடுகள் உள்ளன. கட்டப்பட்டு 33 வருடங்களுக்கு மேல் ஆனதால், இந்த குடியிருப்புக் கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் தரப்பில், வீட்டுவசதி வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும்,300-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்து சென்று விட்டனர். இந்நிலையில், ‘ஏ’ விங் இரண்டாவது கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பகுதி சுவர், மற்றொரு வீட்டின் பால்கனியில் உள்ள ஒரு பகுதி சுவர், ‘பி’ விங் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை ஆகியவை நேற்று அதிகாலை இடிந்து விழுந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago