நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை களைகட்டியது :

நாமக்கல்: நவராத்திரி விழா தொடங்க உள்ளதையடுத்து குமாரபாளையம் பகுதியில் கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது.

ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 7-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்களுக்கு வீடுகளில் கொலு வைத்து நாள்தோறும் வழிபாடுகள் நடத்துவது வழக்கம். விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரப் பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பரத நாட்டிய செட், திருமண செட், வளைகாப்பு செட், இறைவன் திருவுருவங்கள், புராண காலத்து நாயகர்கள் என அனைத்து பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விழா தொடங்கவுள்ள நிலையில் மக்கள் இவற்றை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். விலை குறைவாக இருப்பதால் மக்கள் ஆர்வமாக வாங்குவதாக கொலு பொம்மை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE