நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என - பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து திமுக வெற்றிபெற்றதாக கள்ளக்குறிச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் கிராமத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியது:

பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அளித்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவிற்கு பிறகு 4 ஆண்டு காலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தினார். இதனால் அதிமுக தொண்டன் என்றால் மக்களிடையே ஒரு மரியாதை இருந்தது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு ஏற்படும் நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவேன் எனக்கூறி பொய் வாக்குறுதி அளித்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. இது போல பல்வேறு பொய் வாக்குறுதிகளை திமுக அரசு அளித்துள்ளது என்றார். கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் ரா.குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத்,விஜயபாஸ்கர்,மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடுவேன் எனக்கூறி பொய் வாக்குறுதி அளித்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்