திருவாரூரில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் மற்றும் யோகா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் யோகா நிகழ்வில் பங்கேற்று, தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகை எம்.பி எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்