அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அவசியம் என கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களுக்கு நாகை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகை ஒன்றியம் மகாதானம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பார்வை யாளராக பங்கேற்ற ஆட்சியர் அருண் தம்புராஜ், ஊராட்சியின் முன்னேற்றத்துக்கான ஆலோச னைகளை வழங்கினார். இதில், அவர் பேசியபோது, “எதிர்வரும் பருவமழை காலத்தில் ஒவ்வொரு துளிநீரையும் சேமிக்கும் வகையில், அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரி கள், திருமண மண்டபங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதும், பெண் குழந்தைகளுக்கு தவறான தொடுதல் குறித்து விளக்குவதும் பெற்றோரின் முக்கிய பங்கு” என்றார். கூட்டத்தில், எம்எல்ஏ நாகை மாலி, கோட்டாட்சியர் மணிவேலன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பசுபதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஒன்றியம் செம்பதனிருப்பு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் ரா.லலிதா பேசியபோது, “பெண்களுக்கு எதிரான குற்றங் களை முற்றிலும் தவிர்த்து, பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார். பின்னர், 14 விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருட்களை அவர் வழங்கி னார். கூட்டத்தில், எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், கோட்டாட்சியர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் ஒன்றியம் திருநெய்ப் பேர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சி யர் ப.காயத்ரி கிருஷ்ணன் பங்கேற் றார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் தென்பாதி, வடபாதி உட்பட சுற்றியுள்ள 22 ஊராட்சிகளில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், வடுவூர் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வடுவூர் புதிய வருவாய் வட்ட கோரிக்கை ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரி கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago