வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் - 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு : திருவண்ணாமலை மரபு சார் அமைப்பு தகவல்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமை யான ‘குத்துக்கல்’ மற்றும் ‘கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு’ கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தி.மலை மரபு சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மரபு சார் அமைப்பின் நிறுவனர் ராஜ் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெடால் கிராமத்தின் மேற்கே, மலையடி வாரத்தில் அமைந்துள்ள குளத்தின் பாறை மீது 13 வரிகள்கொண்ட கல்வெட்டு கண் டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (1,216 – 1,242) பாடல் கல்வெட்டு என அறிய முடிகிறது. ஸ்வதஸ் அவனி ஆளப்பிறந்தான் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. கோப்பெருஞ்சிங்கனை புகழ்ந்து காணப்படும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், குளம் அருகே உள்ள மலைப்பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானகுத்துக்கல் கண்டெடுக்கப்பட் டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இனக் குழுவில் உயிரிழந்தவர் நினை வாக குத்துக்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மூத்தோர் வழிபாட்டு முறையின் அங்கமாக விளங்குகிறது.

குத்துக்கல் முனையில் சிறியவட்ட வடிவிலான பகுதி தேய்ந்து பள்ளமாக காணப்படுகிறது. சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் வேட்டைக்கும், போருக்கும் செல்லும் முன்பே தங்களது ஆயுதங்களை குத்துக்கல் மீது தேய்த்து எடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்துள் ளது. அதனடிப்படையில், குத்துக்கல்லில் குழி ஏற்பட்டி ருக்கும் என அனுமானிக்கப் படுகிறது. குத்துக்கல் அருகே கல்வட்டம் ஒன்று பாதி சிதைந்த நிலையில் உள்ளது. இதன்மூலம், இந்த இடத்தின் தொன்மையானது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், மலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் அருகே கரைகண்டேஸ்வரர் என அழைக்கப் படும் குடவரை கோயில் உள்ளது.

அந்த கோயில் பாறையில் புடைப்பாக வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன் மற்றும் லிங்கத்தை முனிவர் ஒருவர் வணங்கும் நிலையும் மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே பகுதியில் பழங்கால பானை ஓடுகள் கிடைக்க பெறுவதால், தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்