விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 64 குழந்தைகளுக்கு ரூ.1.94 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 63 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.1.94 கோடி அரசு நிவாரணத் தொகையை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரமணியன், காவல் அதிகாரி குத்தா லிங்கம், சமூகநலத்துறை அலுவலர் இந்திரா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago