திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி செட்டியப்பனூர் முதல் சேலம் மாவட்டம் ஊத்தங்கரை வரை தேசிய 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலை யோரம் உள்ள மரங்கள் அகற்றும் பணிகள் ஒவ்வொரு பகுதியாக நடந்து வருகின்றன.
ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை உள்ள மரங்கள் முழுமையாக வெட்டப்பட்டு அங்கு சாலை விரிவுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தொடர்ந்து, பொன்னேரி முதல் ஜோலார்பேட்டை வரை சாலை யோரம் இருந்த மரங்கள் அகற் றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜோலார் பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையோரம் உள்ள மரங்களை வெட்டும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகின்றன. திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பெரிய, பெரிய மரங்கள் வெட்டும் பணிகள் நேற்று காலை தொடங்கியது.
வெட்டப்பட்ட மரங்கள் திருப் பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் விழுந்ததால் அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 20-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் ஈடுபட் டனர். இதில், பெரிய வகை மரம் என்பதால் எளிதாக மரங் களை வெட்டி அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால், அவ் வழியாக சென்ற 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
நண்பகல் 1 மணி முதல் 2.30 மணிவரை திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்த போக்குவரத்து காவல் தறையினர் அங்கு விரைந்து சென்று மரங்களை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.
பிறகு, 2 பொக்லைன்கள் கொண்டு வரப்பட்டு சாலை களில் விழுந்த மரங்கள் வேகமாக அகற்றப்பட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து அங்கு காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டுச்சென்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago