தி.மலை மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி முதல் 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல் வரத்து குறைந்துள்ளதால், 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 4-ம் தேதி முதல் செயல்படாது. மேலும், தச்சூர், நல்லூரி, நெடுங்குணம், பாராசூர், தவசிமேடு மற்றும் பெருங்கட்டூர் ஆகிய 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்படும். இந்த 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வரும் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை செயல்படும் என்பதால், அதற்கான முன் பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago