மதுரையில் 4 கி.மீ. தொலைவில் 5 சிக்னல்கள், 7 வேகத்தடைகள் - ஒத்தக்கடை-கே.கே.நகர் இடையே மேம்பாலம் கட்டப்படுமா? :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை ஒத்தக்கடை சந்திப்பில் இருந்து கே.கே.நகர் வரையிலான 4 கி.மீ. தொலைவு உள்ள மேலூர் சாலையில் 5 போக்குவரத்து சிக்னல்கள், 7 வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த சாலையை தினமும் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையின் மையப் பகுதியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பஸ் நிலையம் இருந்தது. தற்போது கே.கே.நகர் ரவுண் டானாவில் இருந்து மேலூர் வரை நகர் பகுதி விரிவடைந்துள்ளது. இச்சாலையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், உயர் நீதிமன்றக் கிளை, ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் அமைந்துள்ளன. இதனால் ஒத்தக்கடை சந்திப்பு வரை அதிக வாகனங்கள் வந்து செல்லக்கூடிய இடங்களாக மாறி உள்ளன.

தென் தமிழகத்தில் இருந்து ‘ரிங்’ ரோடு வழியாகவும், மத்திய மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் மேலூர் வழியாகவும் மாட்டுத்தாவணி பஸ் நிலைத்துக்கு வந்து செல்கின்றன. அதனால் மாட்டுத்தாவணி-மேலூர் சாலையில் போக்குவரத்து எப் போதும் அதிகமாக உள்ளது. இந்த சாலையில் பீக் ஹவர்ஸ் மட்டுமின்றி முகூர்த்த நாட்களிலும் வாகன ஓட்டுநர்கள் கடந்து செல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒத்தக் கடை சந்திப்பு முதல் கே.கே.நகர் ரவுண்டானா வரையிலான இந்த சாலை 4 கி.மீ. தொலைவுதான் உள்ளது. இத்தொலைவுக்குள் 5 போக்குவரத்து சிக்னல்கள், 3 ரவுண்டானாக்கள், 7 வேகத் தடை கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடப்பதற்கு வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொரு சிக்னலிலும் வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் தினமும் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். மேலும் இந்தச் சாலையில் வழிநெடுக தினமும் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் ஷிப்ட் அடிப்படையில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இருப்பினும் இந்தச் சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதி கரித்துவிட்டதால் போலீஸாரால் போக்குவரத்து நெரிசலை குறைக் கவோ, ஒழுங்குபடுத்தவோ முடிய வில்லை.

எனவே ஒத்தக்கடை முதல் கே.கே.நகர் ரவுண்டானா வரை மேம்பாலம் அமைப்பதே போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்கான தீர்வாக அமையும் என்றும், இதற்கு உள்ளூர் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்