திண்டுக்கல் மாவட்டத்தில் 10.64 லட்சம் பேருக்கு தடுப்பூசி : அரசிடம் பாராட்டு பெற்ற மாவட்ட நிர்வாகம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 லட்சத்து 18 ஆயிரத்து 301 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 162 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு பாராட்டி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 18 ஆயிரத்து 301 பேர். இதில் வெளி மாவட்ட நபர்கள் அதிகம் வந்து செல்லும் சுற்றுலாத் தலமான கொடைக்கானல், ஆன்மிகத் தலமான பழநி ஆகிய ஊர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி செலுத்த அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து 2 நகராட்சிகளுக்கும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல் 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் 100 சதவீதத்தை எட்டியுள்ளன.

இதுவரை மாவட்டத்தில் 10 லட்சத்து 64 ஆயிரத்து 162 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு லட்சத்து, 54 ஆயிரத்து 13 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். கடந்த 2 வாரங்களாக நடந்த சிறப்பு முகாமில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியதற்காக ‘எக்சலண்ட்’ என அரசின் பாராட்டையும் மாவட்ட நிர்வாகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்