நூறு நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடிகளை களைந்து, முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே.அமுல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தஞ்சாவூர் ஒன்றி யச் செயலாளர் எம்.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், "கிராமப்புற வறுமை ஒழிப்பு திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்காமல்,போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சட்டபூர்வ கூலி ரூ.273-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்து வதை நிறுத்த வேண்டும். விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை தொடங்கி சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும். வார்டு வாரியாக பிரித்து வேலை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago