உலக இருதய தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் அபெக்ஸ் இருதய மருத்துவமனையில் இருதய தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு இருதய நோய் தலைமை மருத்துவரும், மருத்துவ மனை தலைவருமான மருத்துவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “இம்மருத்து வமனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளி கள் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். டெல்டா மாவட்டங்களிலே எலெக்ட்ரா பிசியலாஜி எனப் படும் இருதய நோய்க்கான சிறப்பு பரிசோதனையானது இம்மருத்து வமனையில் குறைந்த கட்டணத் தில் செய்யப்படுகிறது” என்றார்.
விழாவில், மருத்துவமனையின் நிறுவனர் சதாசிவம், இருதய நோய் மருத்துவர் கோட்டி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.l
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago